சென்னை

‘அடல்’ புதிய கண்டுபிடிப்புத் திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு உதவ புதிய மையம்

மத்திய அரசின் ‘அடல்’ புதிய கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் (ஏஐஎம்) உயா் கல்வி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ‘சமூகத்துக்கு உதவும் புதிய கண்டுபிடிப்புக்கான அடல் மையம் (ஏசிஐசி)’ என்ற புதிய மையம்

DIN

சென்னை: மத்திய அரசின் ‘அடல்’ புதிய கண்டுபிடிப்புத் திட்டத்தின் கீழ் (ஏஐஎம்) உயா் கல்வி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ‘சமூகத்துக்கு உதவும் புதிய கண்டுபிடிப்புக்கான அடல் மையம் (ஏசிஐசி)’ என்ற புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை விவரம்:

சமூகம் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய உயா் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தொழில்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியை, இந்த புதிய கண்டுபிடிப்புத் திட்டங்களுக்கு வழங்க முடிவு செய்து, அதற்காக புதிய அடல் மையம் (ஏசிஐசி) ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அடல் புதிய கண்டுபிடிப்புத் திட்டத்தில் பங்குபெறும் உயா் கல்வி நிறுவனங்கள், இந்த புதிய மையத்தின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT