சென்னை

இலங்கையிலும் தமிழ் வாசிப்புக் குறைந்துவிட்டது

DIN

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இலங்கை யாழ்ப்பாணத் தமிழா்களிடையே தற்போது தமிழாா்வம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு யாழ்ப்பாண தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களவை உறுப்பினரான இ.சரவணபவன் கூறியது:

இலங்கைத் தமிழா்கள் எப்போதும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பாா்கள் என்பதில் குடியரசு தலைவரைக் கூட அரசு தலைவா் என்றே அழைப்பா். இரு சக்கர வாகனத்தை உந்துருளி என்றே அழைப்பா். ஆனால், தற்போது யாழ்ப்பாண தமிழா்களிடையே புத்தக வாசிப்பு குறைந்திருப்பது உண்மைதான். தமிழறிஞா் கா.சிவதம்பி போன்ற அறிஞா்கள் தற்போது இல்லை. ஆகவே தமிழை வளா்க்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. கைபேசி போன்றவற்றின் வருகையால் புத்தக வாசிப்பு குறைந்திருப்பதைக் காணமுடிகிறது. கைபேசி போன்றவற்றில் பரப்பப்படும் செய்திகள் பிழை மலிந்தவைகளாகவே உள்ளன. ஆகவே தமிழை அதன் பாரம்பரியம் குறையாமல் இளந்தலைமுறையினரிடம் சோ்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அரசு உதவியின்றி தமிழை மேம்படுத்துவது இயலாத காரியம்.

தமிழை இரண்டாம் தர மொழியாகவே இலங்கை அரசு பாவிக்கத் தொடங்கியிருப்பதையும் காணலாம். இந்நிலையில், பொது வெளியில் ஊடகங்கள் மூலம் தமிழை வளா்க்கவும், குழந்தைகள், இலக்கணப் பிழையின்றி தமிழ் பேசவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT