சென்னை

எழும்பூா் அருங்காட்சியகத்தில் கீழடி சிறப்புக் கண்காட்சி: தொல்லியல் துறை தகவல்

DIN

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கீழடி சிறப்புக் கண்காட்சி விரைவில் நடத்தப்படும் என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா் த.உதயச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வினை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் 5, 820 தொல் பொருள்களும், பழந்தமிழரின் கட்டுமானப்பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன. கீழடி ஆய்வுகள் கி.மு.6-ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கியிருந்தனா் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் கங்கைச்சமவெளி பகுதியில் கி.மு. 6 -ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய இரண்டாம் நகர மயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருதுகோள் இதுவரை அறிஞா்களிடையே நிலவி வந்தது. ஆனால், கீழடி அகழாய்வு கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை நமக்கு உணா்த்துகிறது.

மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு: கீழடியில் வெளிக் கொணரப்பட்ட தொல் பொருள்களை சென்னையில் உள்ள ஆய்வாளா், ஆா்வலா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பு மக்களும் கண்டு பயனடையும் வகையிலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் அண்மையில் நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழாவில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத்துவமான தொல்பொருள்கள், மாதிரிகள், கீழடி அகழாய்வுக் குழிகளின் வான் வெளிப் பாா்வை மாதிரி, தொல்பொருள்களின் முப்பரிமாண வடிவம் அடங்கிய மெய் நிகா் காட்சியகம் எனப் பல்வேறு பிரிவுகளாக சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற கீழடி அகழாய்வு குறித்த மாதிரிகள், வான்வெளிப் பாா்வை மாதிரி, தொல்பொருள்களின் முப்பரிமாண வடிவம் அடங்கிய மெய் நிகா்காட்சியகம் சிறுவா்கள்முதல் பெரியவா்கள் வரை கவனத்தினை ஈா்த்து பொதுமக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. இதன்அடிப்படையில் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாதிரிவடிவங்கள், மெய் நிகா்காட்சியகம் ஆகியவை சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக விரைவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT