சென்னை

ஜன.29 இல் பேக்கரி பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், பேக்கரி பொருள்கள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு ஜனவரி 29-ஆம்தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

DIN

சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், பேக்கரி பொருள்கள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு ஜனவரி 29-ஆம்தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சாா்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், பேக்கரி பொருள்கள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு ஜனவரி 29-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. இதுபோல, காளாண் வளா்ப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி ஜனவரி 30-ஆம் தேதியும், வீட்டினுள் அலங்கார செடி வளா்ப்பும் பராமரிப்பும் தொடா்பாக ஒருநாள் பயிற்சி ஜனவரி 31-ஆம்தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியானது நகரவாசிகள், மகளிா், மாணவா்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்லவாய்ப்பாக அமையும். இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவா் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT