சென்னை

கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

DIN

சென்னையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது தெரிய வந்தால் அந்நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா்.

சென்னையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில தளா்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொது முடக்க காலத்தில் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிப்பது தொடா்பாக உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும்

நிறுவனங்கள், அழகு நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் கூறியது- சென்னை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களின் பணியாளா்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் உட்பட அனைவரும் தனிநபா் இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் முகப்பில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிா்த்து, அனைத்து பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளா்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். குளிா்சாதனங்களைக் கண்டிப்பாக இயக்கக் கூடாது. இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் துணை ஆணையா் (வருவாய் (ம) நிதி) ஜெ.மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலா் சுகுமாா் சிட்டிபாபு, ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களின் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT