சென்னை

புதுச்சேரி எம்எல்ஏ தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

DIN

புதுச்சேரி எம்எல்ஏ தனவேலு தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க சபாநாயகர், தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி பாகூா் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் தனவேவலு. இவா் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தொடா்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தாா். இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக தனவேலு எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி நீக்கப்பட்டாா். 

இதனிடையே, அரசைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் குற்றஞ்சாட்டி தனவேலு எம்எல்ஏ மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் தலைமையிலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்திடம் மனு அளித்தனா். இதையடுத்து, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தனவேலு எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். 

இதனை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனவேலு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க சபாநாயகர், தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT