சென்னை

பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்

DIN


சேலம்: தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (90) உடல்நலக் குறைவால் சேலத்தில் திங்கள்கிழமை இரவு காலமானார்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் கடந்த 1930 அக்டோபர் 20-ஆம் தேதி பிறந்தவர் கே.என்.லட்சுமணன். ஆர்எஸ்எஸ் அமைப்பில் 1944-இல் தன்னை இணைத்துக் கொண்டார். சேலத்தில் 1957-இல் பாரதிய ஜனசங்கம் துவங்கப்பட காரணமாக இருந்தவர்.  

1980-இல் பாரதிய ஜனதா கட்சி துவங்கியபின், ஆரம்பத்தில் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தார். 1984 முதல் 1989 வரையிலும், 1996 முதல் 2000 வரையிலும் இருமுறை மாநிலத் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை- மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 முதல் தேசியப் பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

சேலத்தில் வித்யா மந்திர் பள்ளியைத் துவக்கியவர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சுமார் நான்கு ஆண்டுகள் சிறை சென்றவர். 1971-இல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் கே.என்.லட்சுமணன் முக்கியமானவர் ஆவார்.

அண்மைக்காலமாக உடல்நலக் குறைவுடன் இருந்த கே.என்.லட்சுமணன், திங்கள்கிழமை இரவு 9.05 மணியளவில் காலமானார். 

இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவியும், சந்திரசேகரன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT