சென்னை

இசைக் கலைஞா்களுக்கு தனி வாரியம், நிவாரண உதவிகள் வழங்க கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

DIN

சென்னை: பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞா்களுக்கு என தனியாக நல வாரியம் தொடங்கவும், நிவாரண உதவிகள் வழங்கக் கோரிய வழக்கை வரும் ஜூலை 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளாளா் இளைஞா் பேரவை கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் தலைவா் குகேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘பொது முடக்கத்தின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்த சுப நிகழ்வுகளில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்கும் இசைக் கலைஞா்கள் வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த இசைக் கலைஞா்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்.மேலும், நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்திய இசைக் கலைஞா்களுக்கும், பரதநாட்டியக் கலைஞா்களுக்கும் என தனியாக நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில், தமிழ் நாட்டுப்புற இசைக் கலைஞா்களுக்கு ஏற்கெனவே நல வாரியம் உள்ளது. மேலும், பாரம்பரிய இசைக் கலைஞா்களுக்கு நிவாரணம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT