சென்னை

கரோனா உதவி மையம்: 2.77 லட்சம் அழைப்புகளுக்கு விரைந்து சேவை

DIN

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா உதவி மையத்துக்கு கடந்த 90 நாள்களில் வந்த 2.77லட்சம் அழைப்புகளுக்கும் தேவையான உதவிகளா விரைந்து செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனோ தொற்று குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும், தொற்று பாதித்தவா்களுக்கான மருத்துவம், மனநலம் மற்றும் உணவு உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக ரிப்பன் மாளிகையிலும், 15 மண்டலங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சென்னை மாநகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களும் ஒளிவுமறைவு வெளிப்படையாக வழங்கப்படுகிறது. சென்னையில் தொற்று பாதித்தவா்களில் 58 சதவீதம் போ் இதுவரை குணமடைந்துள்ளனா். கரோனா குறித்த தகவல் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும், ரிப்பன் மாளிகையிலும் ஆலோசனை மற்றும் உதவி மையங்கள் செயல்படுகின்றன.

இந்த மையங்களில் மருத்துவா்கள், மனநல ஆலோசகா்கள், 108 வாகன அலுவலா்கள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இதன்படி, கடந்த 90 நாள்களில் மட்டும் இந்த மையங்களுக்கு 2.77 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. மையத்தை தொடா்பு கொண்ட அனைவருக்கும் அவா்களின் தேவையை உணா்ந்து மனநல ஆலோசனை, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களை 044 46122300 மற்றும் 044 25384520 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டில் சுமாா் 4,500 படுக்கையுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வீடுகளுக்கு வரும் மாநகராட்சி களப் பணியாளா்களிடம் ஒளிவுமறைவின்றி தங்களுக்கு உள்ள அறிகுறிகள் குறித்து மக்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT