சென்னை

கரோனா நிவாரணப் பணிகள்:  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நிதியுதவி செய்ய வலியுறுத்தல்

DIN


சென்னை:  தமிழக அரசு மேற்கொள்ளும் கரோனா நிவாரணப் பணிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை  வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சா.அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது சமூகப் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 
எனவே அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT