சென்னை

கரோனா அபாயம்: மோட்டார் நிறுவனங்களுக்கு விடுமுறை

DIN

சென்னை: கரோனா தடுப்பு முயற்சியாக முக்கிய மோட்டார் நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக டி.வி.எஸ் நிறுவனம் சார்பில் மார்ச் 23-ஆம் தேதி முதல் 2 நாள்களுக்கு அனைத்து உற்பத்தி சார்ந்த பணிகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலைமைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 இதே போல், திங்கள்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை சென்னையின் உற்பத்தி நடவடிக்கை அனைத்தும் நிறுத்தப்படுவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயத்தில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
 ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொருத்தவரை, உலகளவில் அனைத்து பணிகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நாள்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்றுமாறு அறிவுறுத்திய அந்த நிறுவனம், ஊதியப் பிடித்தம் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT