சென்னை

சுய ஊரடங்கு: வெறிச்சோடியது ரயில் நிலையங்கள்

DIN

சென்னை: சுய ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடின. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வந்த வடமாநில பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
 சுய ஊரடங்கு காரணமாக  சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு, ஜோலார்பேட்டை ஆகிய 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 64 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளி மாநிலங்கள், வெளியூரில் இருந்து வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை புறப்பட்ட ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தன.
அந்த ரயில்களில் இருந்து இறங்கி வந்த பயணிகளை, இன்ஃப்ராரெட் தெர்மோ மீட்டர் கருவி மூலமாக சோதித்து, பிறகு வெளியே அனுப்பினர். காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில்,சென்ட்ரலில் இருந்து  இரவில் புறப்படும் ரயில்களில் செல்வதற்காக வந்த வடமாநில பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர், மருத்துவ குழுவினர் மட்டும் பணியில் ஈடுபட்டனர். 
எழும்பூர் ரயில் நிலையமும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழும்பூர் வந்தடைந்தன. இந்த ரயில்களில் வந்தவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, வெளியே அனுப்பப்பட்டனர். இதுபோல, தாம்பரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மின்சார ரயில் சேவை: சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணம், மூர் மார்க்கெட்  வளாகம்- கும்மிடிப்பூண்டி இடையே காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த இயக்கப்பட்ட ரயில்களில் குûறான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT