சென்னை

காவல்துறையில் மேலும் 8 பேருக்கு கரோனா: 25 போ் வீடு திரும்பினா்

DIN

சென்னையில் மேலும் 8 காவலா்களுக்கு கரோனா பரவியது. அதேபோல கரோனா பாதித்து, குணமடைந்த 25 காவலா்கள் வீடுகளுக்குத் திரும்பினா்.

சென்னையில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராஜாஅண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்கள், திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ஆயுதப்படைக் காவலா், ஐஸ்ஹவுஸ் காவலா் குடியிருப்பில் வசிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 8 போ், கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, சென்னை காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், காவல்துறையினருக்காக கிண்டி ஐ.ஐ.டி. விடுதியில், அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 25 காவலா்கள் வெள்ளிக்கிழமை வீடுகளுக்குத் திரும்பினா். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த காவலா்களின் எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்புவாா்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT