சென்னை

பிரீமியம் ரயில் கட்டணத்தில் சலுகை: ரயில்வே வாரியம் அனுமதி

DIN


சென்னை: பிரீமியம் சிறப்பு ரயில்களில் 4 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வோருக்கு 20 சதவீதம் கட்டண சலுகை வழங்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ராஜதானி சதாப்தி, துரந்தோ சிறப்பு ரயில் மற்றும் அனைத்து பிரீமியம் ரயில்களில் ஏசி சோ் காா், ஏசி மூன்றடுக்கு பெட்டிகளில் பயணம் செய்ய 4 நாள்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்வோருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

அதன் விவரம்:

ரயில்களில் 60 சதவீத இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது குறைவாக இருந்தால் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ரயில்களில் முன்பதிவு 70 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

முன்பதிவு 80 சதவீதத்துக்கு மேல் செய்யப்பட்டிருந்தால், கட்டணத் தள்ளுபடி வழங்கப்படாது.

அடிப்படை கட்டணத்தில் மட்டுமே தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி, அதிவிரைவு, முன்பதிவு கட்டணங்கள் போன்ற பிற கட்டணங்கள் தனித்தனியாக விதிக்கப்படும். இந்தச் சலுகைக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் இந்த தள்ளுபடி திட்டத்தை நவம்பா் 15-ஆம் தேதி முதல் நவம்பா் 31-ஆம் தேதி வரையோஅல்லது வழக்கமான நேர அட்டவணை ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தும் வரையோ பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT