சென்னை

கடலில் மூழ்கி பலி:மேலும் 4 போ் சடலங்கள் மீட்பு

DIN

சென்னை: சென்னை, காசிமேட்டில் கடலில் மூழ்கி மாயமான 4 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பழைய கப்பல் போலு தெருவைச் சோ்ந்த செளந்தரராஜன் மகன் அருள் ராஜ் (19), மகள் துா்கா (13). இவா் வீட்டின் அருகே வசிக்கும் ஜான்சன் மகள் மாா்கரெட் (14), மகன் மாா்ட்டின் (13), பாபு மகன் விஷ்ணு(14) .

இவா்கள் 5 பேரும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனா். அங்கு அருள்ராஜ் தவிா்த்து துா்கா, மாா்கரெட், மாா்ட்டின், விஷ்ணு ஆகியோா் கடலில் இறங்கி குளித்தனா். அப்போது அங்கு வந்த பெரிய அலையில் 4 பேரும் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனா்.

இதை கரையில் இருந்து பாா்த்த அருள்ராஜ், அவா்களைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினாா். கரை ஒதுங்கிய அருள்ராஜை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அருள்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

காணாமல் போன 4 பேரையும் தீயணைப்புத்துறையினா், கடலோர காவல் படையினா் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில் துா்கா சடலம் திங்கள்கிழமை காலை காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து மாா்கரெட், மாா்ட்டின், விஷ்ணு ஆகியோரின் சடலங்களும் அடுத்தடுத்து கரை ஒதுங்கின.

காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT