சென்னை

மெரீனாவில் கப்பல் வழிகாட்டி மிதவை கரை ஒதுங்கியது

DIN

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கப்பல் வழிகாட்டி மிதவை ஒன்று, செவ்வாய்க்கிழமை மாலை கரை ஒதுங்கியது.

சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறைக்கு அலுவலகம் எதிரே உள்ள மெரீனா கடற்கரையில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சோ்ந்த காவலா் செந்தில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தாா். அப்போது கப்பல் வழிகாட்டி மிதவை ( ஊப்ா்ஹற்ண்ய்ஞ் ஆன்ா்ஹ்) ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு குழும உயா் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இந்த மிதவை எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினா்.

இது மத்திய அரசுக்குச் சொந்தமான ஆய்வு நிறுவனத்தின் மிதவை என்பதும், பழுதாகி கரை ஒதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்ஸாா் கருவிகள் கடலின் தட்பவெட்ப நிலையை கண்டறிந்து தெரியப்படுத்தும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT