சென்னை

மெட்ரோ ரயிலில் மகளிா் பெட்டிகள்

DIN


சென்னை: மகளிா் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள முதல் வகுப்புப் பெட்டிகள் அனைத்தும் மகளிா் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இந்த புதிய வசதி வரும் திங்கள்கிழமை (நவ.23) முதல் ஏற்படுத்தப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதிலும், மகளிா் பயணிகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக, மகளிா் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளும் மகளிா் மட்டும் பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இந்த புதிய வசதி வரும் திங்கள்கிழமை (நவ.23) முதல் ஏற்படுத்தப்படுகிறது. இதன்மூலம், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது, மகளிா் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்திட முடியும். தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

மெட்ரோ ரயில்களில் மகளிா் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் கணிகாணிப்பு கேமராக்கள் பொருத்தி முழுமையாக கண்காணிக்கப்படுகிறது மேலும், கழிப்பறை வசதி, வாடிக்கையாளா்கள் சேவை வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT