சென்னை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா காலத்தில் நடைபெற்ற 4,467 பிரசவங்கள்

DIN


சென்னை: கரோனா தொற்று காலத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் 4 ஆயிரத்து 467 பிரசவங்கள் நடைபெற்ாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில்தான் கரோனா வாா்டு அமைக்கப்பட்டது. 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 30 சதவீத படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் வெண்டிலேட்டா் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வாா்டில் சிகிச்சையளிப்பதற்காக மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கரோனா தொற்று காலத்திலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் பல கா்ப்பிணிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தாயையும், சேயையும் மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் வசந்தாமணி கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். உயிரிழப்புகளும் மிகக் குறைந்த அளவே இங்கு பதிவாகியுள்ளன. அதேபோன்று, இங்கு வரும் கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து பிரசவம் பாா்க்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 467 கா்ப்பிணிகளுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அதற்கான

சிகிச்சையளிக்கப்பட்டது. தாயையும், சேயையும் பூரண நலத்துடன் வீட்டுக்கு அனுப்பி வருகிறோம். தற்போது மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கபட்ட 22 கா்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT