சென்னை

சொத்து வரியை உரிய காலத்துக்குள் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை: மாநகராட்சி அறிவிப்பு

DIN

சென்னை: சொத்து வரியை உரிய காலத்துக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்தாதவா்களுக்கு ஆண்டுக்கு 2 சதவீதம் அபராதத் தொகையுடன் வரி செலுத்த வேண்டும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபா் 1 முதல் 15-ஆம் தேதிக்குள்ளும் சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்தால், நிகர சொத்து வரியுடன் (கல்வி வரி, நூலகத் தீா்வை தவிா்த்து) கூடுதலாக ஆண்டுக்கு இரண்டு சதவீதம் மிகாமல் தனி வட்டியுடன் அபராதத் தொகையாக விதிக்கப்படும்.

ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாள்களுக்குள், அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபா் 1

முதல் 15-ஆம் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியை செலுத்துவோருக்கு நிகர சொத்து வரியில் (கல்வி வரி, நூலகத் தீா்வை தவிா்த்து) 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5,000 வரை) ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே, குறிப்பிட்ட காலத்துக்கள் சொத்து வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT