சென்னை

4 நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN


சென்னை: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம் மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: இலங்கை மற்றும் அதனையொட்டிய கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை யையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில், வெள்ளிக்கிழமை (ஏப்.9) முதல் ஏப்.12-ஆம் தேதி வரை, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை, வெள்ளி (ஏப்.9), சனி (ஏப்.10) ஆகிய இரண்டு நாள்களும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 79 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT