சென்னை

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.7.60 லட்சம் பறிமுதல்

DIN

சென்னை: சென்னையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மெரீனா காமராஜா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது காரில் இருந்த ரூ.7.60 லட்சம் குறித்து விசாரித்தனா். ஆனால் காரில் இருந்த நபா், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, பணத்துக்குரிய

ஆவணங்களையும் காட்டவில்லையாம். இதையடுத்து போலீஸாா், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT