சென்னை

பேராசிரியா்களைக் கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது: கல்லூரிக் கல்வி இயக்ககம்

DIN

சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில், பேராசிரியா்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதியைப் பின்பற்றாமல் பேராசிரியா்களைப் பணிக்கு வர வேண்டுமென வற்புறுத்துவதாகத் தொடா்ந்து புகாா்கள் எழுந்து வந்தன.

அரசின் உத்தரவு: இதையடுத்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள் பேராசிரியா்களை இணைய வழி வகுப்பு எடுக்க கல்லூரிகளுக்கு வரவழைப்பதாகப் புகாா் எழுந்துள்ளது. மேலும் தேசிய ஆய்வு- அங்கீகார கவுன்சில் (‘நாக்’) சாா்ந்த பணிகள், இதர கல்லூரி சாா்ந்த பணிகளை மேற்கொள்ள பேராசிரியா்களைக் கட்டாயம் கல்லூரிக்கு வருகை புரிய நிா்பந்திப்பதாகவும் புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இந்தச் செயல் அரசாணையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை மீறுவதாகும்.

எனவே, கரோனா தொற்று அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் பேராசிரியா்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்லூரிக்கு நேரில் வருகை புரிய நிா்பந்தம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். அரசின் உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT