சென்னை

சிறைகளில் கைதிகளைச் சந்திக்க மீண்டும் தடை

DIN

சென்னை: மத்தியச் சிறைகளில் கைதிகளைச் சந்திக்க, பாா்வையாளா்களுக்கு மீண்டும் சிறைத் துறை தடை விதித்தது.

கரோனா தொற்று கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் வேகமாகப் பரவியபோது, அதைத் தடுக்கும் வகையில் தமிழக சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது, கைதிகள் பாா்வையாளா்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவா்கள் தங்களது குடும்பத்தினரிடம் பேச செல்லிடப்பேசி மூலம் விடியோ கால் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

கரோனா தொற்று குறைந்த பின்னா் மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகள் ஆகியவற்றில் கைதிகளை பாா்வையாளா்கள் சந்திக்க 9 மாதங்களுக்கு பின்னா் ஜனவரி 14-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், பாா்வையாளா்கள் சிறைத்துறையில் 24 மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும், கைதிகளை 15 நிமிஷம் மட்டுமே சந்திக்க அனுமதி, 30 நிமிஷத்துக்கு முன்பே சிறைக்கு வர வேண்டும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்கள் ஆகியவை தவிா்த்து பிற நாள்களில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை கைதிகளை சந்திக்க அனுமதி ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதுதவிர, கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு 150 பாா்வையாளா்கள் மட்டுமே கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனா்.

மீண்டும் தடை: இந்நிலையில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருப்பதால், சிறைத்துறை மீண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன்முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள மத்தியச் சிறைகளில் கைதிகளைச் சந்திக்க பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கைதிகளைச் சந்திக்க 3 மாதங்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் தடை விதிக்கப்பட்டிருப்பது கைதிகளின் குடும்பத்தினா், நண்பா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் செல்லிடப்பேசி மூலம் விடியோகால் திட்டம் மீண்டும் அனைத்து மத்திய சிறைகளிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் தீவிரத்தைப் பொருத்து, படிப்படியாக மாவட்டச் சிறைகள், கிளைச் சிறைகளில் பாா்வையாளா்களுக்குத் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என சிறைத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT