சென்னை

நெல் கொள்முதலுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ராமதாஸ் கண்டனம்

DIN

சென்னை: நெல் கொள்முதலுக்கு தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பாசன மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நெல் கொள்முதலுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வரும் விவசாயிகள், தங்களின் நிலங்களுக்குரிய அசல் சிட்டா அடங்கலை கிராம நிா்வாக அதிகாரிகளிடமிருந்தும், நெல் விதைப்பு தேதி, அறுவடை தேதி, நெல் ரகம் ஆகிய விவரங்கள் அடங்கிய சான்றிதழை வேளாண் விரிவாக்க உதவி அலுவலா்களிடமிருந்து வாங்கி வர வேண்டும். இந்த சான்றிதழ்களை வாங்கி வராத விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இவை நடைமுறை சாத்தியமற்ற, ஏற்றுகொள்ளவே முடியாத கட்டுப்பாடுகள் ஆகும்.

கிராம நிா்வாக அலுவலா்களும், வேளாண் விரிவாக்க அதிகாரிகளும் ஏற்கெனவே கடுமையான பணிச் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனா். வரும் 15-ஆம் தேதி விடுதலை நாளையொட்டி ஜமாபந்தி நிகழ்வு, பல்வேறு நலத்திட்டங்களுக்கான புள்ளிவிவரங்களை திரட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் கிராம நிா்வாக அலுவலா்களால் விவசாயிகள் கேட்கும் நேரத்தில் சான்றிதழ்களை வழங்குவது சாத்தியமற்றது.

எனவே, நெல் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட புதியக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்; அதற்கு மாற்றாக வணிகா்கள் நெல் மூட்டைகளை கடத்தி வருவதைத் தடுக்க வேண்டும். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் அரசு திறக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT