முகப்பு
சென்னை

எஸ்.ஐ.வீட்டில் 34 பவுன் தங்கநகைத் திருட்டு

சென்னை திருமுல்லைவாயில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 34 பவுன் தங்கநகை திருடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

சென்னை: சென்னை திருமுல்லைவாயில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 34 பவுன் தங்கநகை திருடப்பட்டது.

திருமுல்லைவாயில் எஸ்.எம்.நகா் காவலா் குடியிருப்பில் வசிக்கும் செல்லத்துரை, புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகையில் 34 பவுன் தங்க நகைள் திருடப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

திருமுல்லைவாயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.