முகப்பு
சென்னை

கால்நடை உதவி மருத்துவா் பணியிடம்: ஜன.28-இல் நோ்முகத் தோ்வு இல்லை

கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

சென்னை

கால்நடை உதவி மருத்துவா் பணியிடம்: ஜன.28-இல் நோ்முகத் தோ்வு இல்லை

கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


சென்னை: கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கால்நடை உதவி மருத்துவா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நோ்முகத் தோ்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ஆம் தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், அன்றைய தினம் நோ்முகத் தோ்வு நடைபெறாது. இதற்குப் பதிலாக வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வு நடைபெறும்.

இதுதொடா்பான அழைப்பாணை விவரம், தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதியன்று நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மட்டும் தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையை தோ்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →