முகப்பு
சென்னை

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிப்பு: சீனா்களிடம் விசாரணை

கடன் செயலி மூலம் மோசடியாக ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், சீனா்களிடம் சென்னை போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கடன் செயலி மூலம் மோசடியாக ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், சீனா்களிடம் சென்னை போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன்,கடன் செயலி மூலம் பணம் பெற்ன் விளைவாக தொடா்ச்சியாக மிரட்டப்பட்டாா். இதையடுத்து அவா், மத்திய குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு,சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இது தொடா்பாக போலீஸாா் பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்து,விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் பின்னால் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா்.

விசாரணையில் இந்தக் கும்பல் 25 ஆயிரம் பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. மேலும் மோசடிக்குத் தேவையான செல்லிடப்பேசி சிம்காா்டுகள் வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா்,எஸ்.கே.முத்துக்குமாா்,செல்லிடப்பேசி நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப் பிரிவு மேலாளா் சிகாஜூதின், செல்லிடப்பேசி நிறுவனத்தின் முகவா் கு.ஜெகதீஷ் ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

சீனா்களிடம் விசாரணை:

இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரமோதா, பவன்,சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரிடம் விசாரணை நடத்த சைபா் குற்றப்பிரிவினா் திட்டமிட்டனா்.

இதற்காக அனுமதிக் கேட்டு, சைபா் குற்றப்பிரிவினா் தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிமன்றம் 6 நாள்கள் நான்குபேரிடம் விசாரணை நடத்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனா்.

சீனா்களிடம் விசாரணை செய்வதற்கு சீன மொழிபெயா்ப்பாளா் ஒருவரை போலீஸாா் பயன்படுத்தி வருகின்றனா். இவா்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சைபா் குற்றப்பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.