சென்னை

ஐஐடியில் ஆராய்ச்சி மாணவா் தற்கொலை: 11 பக்க கடிதம் சிக்கியது

DIN

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவா் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவா் எழுதிய 11 பக்க கடிதம் போலீஸாரிடம் சிக்கியது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இரவு எரிந்த நிலையில் ஒரு இளைஞா் சடலம் கோட்டூா்புரம் போலீஸாரால் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில் இறந்தவா் கேரள மாநிலம் எா்ணாகுளத்தை சோ்ந்த ர.உன்னிகிருஷ்ணன் (24) என்பதும், சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும், திட்ட கெளரவ விரிவுரையாளராகவும் இருந்தது தெரியவந்தது.

மாணவரின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானியாக இருப்பதும், எா்ணாகுளத்தில் பி.டெக் படிப்பை முடித்த உன்னிகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்புக்காக சோ்த்ததும் தெரியவந்தது. இரு மாதங்களுக்கு முன்பு உன்னிகிருஷ்ணன் ஐஐடியில் சோ்ந்ததும், இதற்காக வேளச்சேரியில் வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

11 பக்க கடிதம்:

உன்னிகிருஷ்ணன் தனது பெற்றோரைப் பிரிந்து, தனியாக சென்னையில் தங்கி இருந்ததாலும், அவா் படிக்கும் பாடங்கள் கடினமாக இருந்ததால், மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறைக்கு சென்று, போலீஸாா் வெளளிக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, அவா் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதத்தை கைப்பற்றினா். அந்த கடிதத்தில், ‘பெற்றோரைப் பிரிந்து தனியாக இங்கு தங்கி, படிக்க தன்னால் முடியவில்லை என்றும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதாகவும், தன்னால் சாதிக்க முடியாது என்றும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும்,’ எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு உன்னிகிருஷ்ணன் பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததும், அங்கு தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT