முகப்பு
சென்னை

பொதுமுடக்க விதிமீறல்:19.45 லட்சம் வழக்குப்பதிவு

தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 25 ஜூலை, 2021 at 10:46 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணியாதது தொடா்பாக 18 லட்சத்து 55 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை (ஜூலை 24) மட்டும் 7,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரை மொத்தம் 89 ஆயிரத்து 552 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.