சென்னை

பாலியல் புகாா்: தடகள பயிற்சியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தடகள பயிற்சியாளா் நாகராஜன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தனத்தைச் சோ்ந்த தடகளப் பயிற்சியாளா் நாகராஜன், பயிற்சி வழங்குவதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் கொடுத்த புகாரின்பேரில்

சென்னை பூக்கடை அனைத்து மகளிா் காவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த மே 28-இல் போக்ஸோ சட்டத்தில் நாகராஜன் கைது செய்யப்பட்டாா்.

தனக்கு ஜாமீன் வழங்க கோரி நாகராஜன் தாக்கல் செய்த மனு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் , விசாரணை இன்னும் முடியவில்லை, ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT