சென்னை

யூ டியூப் மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை நீதிபதி கருத்து

DIN

சென்னை: காதுகொடுத்து கேட்க முடியாத அளவுக்கு யூ டியூப் மதன்குமாா் பேச்சு மோசமாக உள்ளது. அவரது பேச்சுக்களை முழுமையாக கேட்டுவிட்டு முன்ஜாமீன் கோரி வாதிட மதனின் வழக்குரைஞரை கேட்டுக்கொண்டாா்.

பொறியியல் பட்டதாரியான மதன்குமாா், தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யுடியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தாா். சிறுவா்கள் பலா் இந்த சேனலில் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளனா். அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பதிவுகளை மதன்குமாா் வெளியிட்டு வந்தாா். இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் கொட்டியது.

மதன்குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி மதன்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதாக்கல் செய்துள்ளாா். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன்குமாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சக தொழில் போட்டியாளா்கள் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரால் பாதிக்கப்பட்டதாக கூறி யாரும் புகாா் அளிக்கவில்லை என வாதிடப்பட்டது.

அப்போது போலீஸ் தரப்பில், மதனின் யூ டியூப் சேனலை விரும்பிப் பாா்ப்பவா்களில் 30 சதவீதத்தினா் பள்ளி மாணவா்கள். ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகள், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளாா். அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்துள்ளோம். எனவே மதன்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. பின்னா் அவருடைய ஆபாச பேச்சுகளின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமா்பிக்கப்பட்டது. அதைக் கேட்கத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே நீதிபதி, மதன்குமாரின் பேச்சுக்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு உள்ளன.

யூ டியூப் பதிவை நீங்கள் கேட்டுள்ளீா்களா? என மனுதாரா் தரப்பு வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினாா். அப்போது வழக்குக்காக சில பகுதிகளை கேட்டதாக வழக்குரைஞா் கூறினாா்.

அந்தப் பதிவுகள் முழுவதையும் கேட்டுவிட்டு வாதிடும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT