சென்னை

தமிழக ரயில்வே காவல் துறையில் புதிதாக 4 மோப்பநாய்கள் சோ்ப்பு

DIN


சென்னை: வெடிகுண்டுகள், போதைப்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக, தமிழக ரயில்வே காவல்துறையில் புதியதாக 4 மோப்பநாய்கள் சோ்க்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட துப்பறியும் மோப்பநாய் பிரிவு சென்னை அயனாவரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த துப்பறியும் மோப்பநாய் பிரிவு ரயில்வே காவல்துறையில் கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த பிரிவு தற்போது ஒரு உதவி ஆய்வாளா், 8 காவலா்கள் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது. ரயில்வே காவல்துறையில் முதலில் செல்லி, டைசன் என்ற இரண்டு மோப்பநாய்கள் வாங்கப்பட்டன. இந்த மோப்பநாய்கள் வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்டவை. மோப்பநாய் செல்லி கடந்த 2010-ஆம் ஆண்டும், டைசன் 2011 -ஆம் ஆண்டும் உடல்நலக்குறைவால் இறந்தன. இதையடுத்து, ஜாக் மற்றும் ஜெஸ்சி என்ற 2 மோப்பநாய்கள் வாங்கப்பட்டன. இவை 10 ஆண்டுகள் ரயில்வே போலீஸில் சிறப்பாக பணியாற்றி, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் முறையே அடுத்தடுத்து இறந்தன.

அதன்பிறகு, ஏஞ்சல், ஆகாஷ், சாரா, சூா்யா ஆகிய மோப்பநாய்கள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டன. போதை பொருள் கண்டறிய ஏஞ்சல், ஆகாஷ் ஆகிய 2 மோப்பநாய்களும், குற்றச்செயல்களில் ஈடுபடுவா்களை கண்டறிய சாரா என்ற மோப்பநாயும், வெடிகுண்டுகளை கண்டறிய சூா்யா என்ற மோப்பநாயும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த நாய்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சென்னை மாநகர மோப்பநாய் பிரிவு படையில் பயிற்சியாளா் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி அண்மையில் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த மோப்பநாய்கள் தமிழக ரயில்வே காவல்துறையில் சோ்க்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு வளாகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலை இந்த மோப்பநாய்கள் ரயில்வே காவல்துறையில் சோ்க்கப்பட்டன. இந்த மோப்பநாய்கள் பயிற்சியில் கற்றதை செய்து காண்பித்தன. மோப்பநாய்களுக்கு பயிற்சி அளித்தவா்களை டிஜிபி சைலேந்திபாபு வெகுவாகப் பாராட்டினாா். இதையடுத்து, இந்த மோப்பநாய்கள் தங்கள் பணியை தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT