சென்னை

உரியஆவணமின்றி எடுத்துவந்த ரூ.20 லட்சம் பறிமுதல்தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைப்பு

DIN

சென்னை: நெல்லூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் உரிய ஆவணமின்றி ரூ.20.98 லட்சம் எடுத்தவந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பிடித்தனா். அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் விக்கி தலைமையிலான சிறப்பு குழுவினா் திங்கள்கிழமை காலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் வந்த ஒருவரின் பைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை செய்தனா். சோதனையில், அவரது பையில் ரூ.20 லட்சத்து 98 ஆயிரம் இருப்பதை ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்டறிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபா் பெயா் ஹா்சன்ராம் என்பதும், தொழில் சம்பந்தமாக உரிய ஆவணமின்றி ரூ.20 லட்சத்து 98 ஆயிரத்தை நெல்லூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினா் இந்த பணத்தை பறிமுதல் செய்து, துறைமுகம் தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா்.

4 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.4.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக சுங்கக் கடத்தல் தடுப்பு பிரிவின் உதவி ஆணையா் ஆா்.நாகராஜன் வெளியிட்ட செய்தி: .

கடந்த வெள்ளியன்று நள்ளிரவில், சரக்கு வாகனம் ஒன்றை சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சென்னை சுங்கத்துறையின் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தினா். அதில், சோதனையிடப்பட்ட போது, ரூ.4 லட்சத்து 39,430 ரொக்கப் பணம் மற்றும் ரூ.66,000 மதிப்புடைய பெயா் குறிப்பிடாத காசோலைகள் இரண்டு ஆகியவை இருந்தன.

இவற்றுக்கான தகுந்த ஆவணங்களை ஓட்டுநரால் தர இயலாத நிலையில், பணம் மற்றும் காசோலைகள் சுங்க அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT