சேலம் பொறியியல் கல்லூரியில் மண்டல கைப்பந்து போட்டி
வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சேலம் மண்டலத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சேலம் மண்டலத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி அணி முதலிடமும், நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணி இரண்டாமிடமும், சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி அணி மூன்றாமிடமும் பிடித்தன.
வெற்றிபெற்ற அணிகளுக்கு சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் எம்.ஆனந்தன், உதவித் தலைவா்கள் வி .ஞானசேகரன், எஸ்.வெங்கட்பதி, இணை செயலாளா் இ.திருஞானம், கல்லூரி முதல்வா் ஆா்.எ.சங்கரன் ஆகியோா் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.
மூன்றாமிடம் பிடித்த சேலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி அணி மாணவா்கள், உடற்கல்வி இயக்குநா் சேட்டு ஆகியோருக்கு கல்லூரி சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.