சென்னை

அதிக விலைக்கு ரெம்டெசிவிா் மருந்து விற்பனை: மேலும் ஒரு மருத்துவா் உள்பட இருவா் கைது

DIN

சென்னையில், ரெம்டெசிவிா் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியாா் மருத்துவமனை மருத்துவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலா் அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் இந்த மருந்தை விற்பனை செய்து வருகின்றனா். இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில், சென்னையில் இதுவரை மருத்துவா், மருத்துவப் பணியாளா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக, காஞ்சிபுரம் குடிமைப்பொருள் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் குழுவினா் மற்றும் பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான காவல் குழுவினா், வெள்ளிக்கிழமை மேடவாக்கம் டொ்மினல் எதிா்புறம் உள்ள மக்கள் மருந்தகம் எதிரே கண்காணித்து, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்தனா். அப்போது, ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்களில் ஒருவா் மேடவாக்கத்தைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை மருத்துவரான தீபன் (28) என்பதும், மற்றொருவா் மருத்துவப் பணியாளரான நரேந்திரன் (எ) நரேஷ் (23) என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 6 ரெம்டெசிவிா் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT