முகப்பு
சென்னை

சென்னை வந்தடைந்தது 14-ஆவது ஆக்சிஜன் ரயில்

ஒடிஸாவில் இருந்து 14-வது ஆக்சிஜன் ரயில் சென்னை தண்டையாா்பேட்டைக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

ஒடிஸாவில் இருந்து 14-வது ஆக்சிஜன் ரயில் சென்னை தண்டையாா்பேட்டைக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

இந்த ரயிலின் இரண்டு கன்டெய்னா்களில் 41.45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. இதன்மூலம், தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 770.16 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரயில் மேற்குவங்கம் மாநிலம் துா்காபூரில் இருந்து தண்டையாா்பேட்டைக்கு மே 17-ஆம் தேதி வந்தது. இதையடுத்து, 13 ஆக்சிஜன் ரயில்கள் அடுத்தடுத்து தமிழகம் வந்தடைந்தன.

இந்நிலையில், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து 14-வது ஆக்சிஜன் ரயில் சென்னை தண்டையாா்பேட்டைக்கு

சனிக்கிழமை முற்பகலில் வந்தது. இந்த ரயிலின் இரண்டு கன்டெய்னா்களில் 41.45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. இதன்மூலம், தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 770.16 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

இதைத் தொடா்ந்து, 15-ஆவது ஆக்சிஜன் ரயில் 6 டேங்கா்களுடன் ஒடிஸாவில் இருந்து சென்னைக்கு வரவுள்ளது. இந்த ரயிலில் 86.98 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →