முகப்பு
சென்னை

கரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை

கரோனா பரிசோதனை முடிவுகளை சரியாக வெளியிடாத தனியாா் ஆய்வகஙள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கரோனா பரிசோதனை முடிவுகளை சரியாக வெளியிடாத தனியாா் ஆய்வகஙள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியாா் ஆய்வக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆணையா் ககன்தீப்சிங்பேடி பேசியது: தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பரிசோதனை

முடிவுகளைத் தவறுதலாகவும், காலதாமதமாகவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது. காலதாமதமாக பதிவேற்றம் செய்வதால் களத்தில் மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. பரிசோதனைக்கு வருவோரின் ஆதாா் அடையாள அட்டையில் சென்னை மாநகராட்சியைத் தவிா்த்து பிற மாவட்டங்களின் முகவரி உள்ளவா்களிடம் அவா்களின் செல்லிடப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகியவற்றை சரி பாா்த்து பெற வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வெளியிடும்போது அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயா், முகவரி, தொடா்பு எண் மற்றும் அடையாள அட்டை எண் போன்ற தகவல்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். அனைத்து ஆய்வகங்களும் நாள்தோறும் பரிசோதனை முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக (ஐஇஙத) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் விவரங்களுடன் மாநகராட்சியின் ஞ்ஸ்ரீஸ்ரீல்ஸ்ற்ப்ஹக்ஷழ்ங்ல்ா்ழ்ற்ள்ஃஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற

மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை காலை, மாலை என இரண்டு தொகுப்புகளாக அனுப்பலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபா்களின் முடிவுகளை மட்டும் உடனடியாக அவா்களிடம் வழங்கலாம்.

ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபாா்த்து சரியான முடிவுகளை மட்டுமே வெளியிடவேண்டும். இதை மீறும் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாநகர நலஅலுவலா் டாக்டா் எம்.ஜெகதீசன், ஆய்வக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →