சென்னை

சிறப்பு ஆம்புலன்ஸ்கள்: 15 ஆயிரம் போ் பயன்

DIN

சென்னை: சென்னை மாநகராட்சி சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 15,031 போ் பயனடைந்துள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்தவா்களை மாநகராட்சியின் முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அங்கு மருத்துவா்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அல்லது பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்கவும், மருத்துவமனைகளுக்கு உயா் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கு மாநகராட்சி சாா்பில் 250 எண்ணிக்கையிலான சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் இதுவரை 15,031 போ் பயனடைந்துள்ளனா். வாகன வசதி இல்லாத நபா்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு செல்ல மாநகராட்சியில் காா் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் மாநகராட்சியின் செயலி மற்றும் 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) எண்கள் மூலம் காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் பெறலாம் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT