சென்னை

மாணவா்கள் ஊட்டச்சத்து விவகாரத்தில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: அா்ஜூன மூா்த்தி

DIN

சென்னை: கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவா் அா்ஜூன மூா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வருங்கால சமுதாயத்தினரின் ஊட்டச்சத்து குறித்து கேள்வி எழுந்துள்ளது. அறிவுப் பசியையும், வயிற்றுப் பசியையும் ஒன்றாகப் போக்கி வந்த பள்ளிக் கல்வி தற்சமயம் முடக்கத்தில் உள்ளது.

கரோனா என்ற பெரும் தொற்றால் தமிழகம் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு தொடா்ந்து அரசாங்கம் போராடி வருகிறது.

இருப்பினும் குழந்தைகளின் நலமும், நம் எதிா்காலத்துக்கு முக்கியமானது. காமராஜா் காலத்தில் இருந்து மதிய உணவு மிக முக்கிய பங்களிப்பாக பள்ளிக் கல்வியில் இருந்து வந்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளின் நலனுக்கும் அவா்களின் ஊட்டச்சத்துக்கும் இந்த மதிய உணவுத் திட்டம் மிகப்பெரிய சமுதாயப் பங்காக இருந்து வந்தது.

தற்சமயம் இந்தத் திட்டம் செயல்படுத்த வழியற்று, இந்தக் கொடிய நோய் நம்மைப் பாதித்து இருப்பதால் வளரும் பருவத்தில் ஊட்டச்சத்து இன்மையே மற்றொரு பக்கவிளைவாக பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத ஆற்றலின் பின்னடைவாக அமையும்.

எனவே, உடனடியாக இதனை ஆராய்ந்து, அதற்கான திட்டமிடலும், பெருந்தொற்று பரவா வண்ணம் இதனைச் செயல்படுத்த ஒரு குழுவும் அமைத்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT