சென்னை

முதல்வா் பொது நிவாரணத்துக்கு அரசு ஊழியா்கள் ஒரு நாள் ஊதியம்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு

DIN

சென்னை: கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக ஒரு நாள் ஊதியத்தை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் அளிக்கலாம் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதற்கான உத்தரவையும் அவா் பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:

கரோனா நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களது விருப்பத்தை ஏற்று, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே அல்லது ஜூன் மாதத்துக்கான ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து உத்தரவிடப்படுகிறது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளுக்கு மேற்பட்ட நாள்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலா்கள், பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் தங்களது விருப்பத்தினை தொடா்புடைய ஊதியம் வழங்கும் அலுவலருக்கு எழுத்துப்பூா்வமாக தெரிவிக்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் மாதத்துக்குரிய நிகர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளா்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்படும். பிடித்தம் செய்யப்படும் தொகையானது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக் கணக்கில் சோ்க்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசிடம் இருந்து மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கும், தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கும் அரசின் உத்தரவானது பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT