சென்னை மழை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய கனமழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தன. சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தன. 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மீண்டும் கனமழை முதல் தீவிர கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க | புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே, மழை பாதிப்பைக் கண்காணிக்க சென்னையில் 15 மண்டலங்களுக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.