சென்னை

இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: மழையால் தடைபடாது என அறிவிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் ஒன்பதாவது கட்டமாக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை (நவ. 18) நடைபெறவுள்ளது. வழக்கமாக வார இறுதியில் மட்டும் நடைபெற்று வந்த இந்த முகாம் வியாழக்கிழமை முதல் வாரந்தோறும் இரு முறை நடைபெறவிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி முகாம் தடைபடாது என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி முதல் தற்போது வரை எட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் வாயிலாக மாநிலம் முழுவதும் இதுவரை 73 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா். விரைவாக அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்துவதற்காக இனிமேல் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இரு நாள்களுக்கு முன்பு தெரிவித்தாா்.

அதன்படி ஒன்பதாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவைதவிர மருத்துவா் தலைமையிலான குழுவினா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: கைதானவர் தற்கொலை

SCROLL FOR NEXT