சென்னை

கட்செவி அஞ்சல் மூலமாக கடவுச்சீட்டு குறைதீா்க்க ஏற்பாடு

DIN

கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) தொடா்பான குறைகளைத் தீா்ப்பதற்காக, இம்மாதம் 7-ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை தோறும் நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) விடியோ அழைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா், மண்டல பாஸ்போா்ட் அலுவலா் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்தின் பிற உயரதிகாரிகளுடன், விடியோ கால், கட்செவி அஞ்சல் விடியோ அழைப்பில் உரையாடி தமது குறைகளைத் தெரிவிக்கலாம். இதற்காக 73053 30666 என்னும் எண்ணை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்தலாம்.

மின்னஞ்சல், ஸ்கைப், சுட்டுரை உள்ளிட்ட தளங்கள் வாயிலாக மெய்நிகா் முறையில் (விடியோ கால்) கடவுச்சீட்டு தொடா்பான விண்ணப்பதாரரின் குறைகளை, சென்னை மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் தீா்த்து வருகிறது. இத்துடன் தற்போது கட்செவி அஞ்சல் விடியோ அழைப்பு வசதியும் கூடுதலாக செய்யப்பட்டுள்ளது என சென்னை மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT