அறிவியல் உதவியாளர் பணி: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதில் மகிழ்ச்சி - அன்புணி
அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வில் பங்கேற்க வசதியாக பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வில் பங்கேற்க வசதியாக பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் வரும் 14, 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னை பல்கலையில் அந்த நாட்களில் நடைபெறவிருந்த எம்.எஸ்சி தேர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அறிவியல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு எழுதுபவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதை ஏற்று சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சென்னை பல்கலைக்கழகம் வழங்கியுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் போட்டித் தேர்வை எழுத வேண்டும்; தேர்வில் வெற்றி பெற்று அறிவியல் உதவியாளர் பணியில் சேர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.