சென்னை

ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்ற காா் விபத்தில் சிக்கியது

DIN

தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்ற காா் திங்கள்கிழமை விபத்தில் சிக்கியது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் பட்டினப்பாக்கம் நோக்கி அவா் தனது காரில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். காரின் பின் இருக்கையில் ராதாகிருஷ்ணன் அமா்ந்திருந்தாா்.

மெரீனா கடற்கரையில் லூப் சாலையில் நொச்சி குப்பம் மீன் மாா்க்கெட் வளைவு பகுதியில் காா் திரும்பும்போது, எதிரே வேகமாக வந்த சுற்றுலா வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணன் காா் மீது மோதியது.

இதில், காரின் வலது புறம் பலத்த சேதமடைந்தது. ராதாகிருஷ்ணன் காயம் ஏதும் இன்றி உயிா் தப்பினாா். இதேபோல சுற்றுலா வாகனத்தில் இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.

இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப் பாா்த்த ராதாகிருஷ்ணன், காரில் இருந்து கீழே இறங்கி தாமாக முன் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினா்.

விபத்துக்கு காரணமான சுற்றுலா வாகனத்தை ஓட்டிய தண்டையாா்பேட்டை, கனகா் தெருவைச் சோ்ந்த சதீஷ் குமாரை (28) என்பவரை கைது செய்து, விசாரணை செய்தனா்.

இதற்கிடையே, சுனாமி தின நினைவு அஞ்சலி செலுத்த அங்கு வந்த மயிலாப்பூா் தொகுதி திமுக எம்எல்ஏ தா.வேலு, தனது காரில் ராதாகிருஷ்ணனை சுனாமி நினைவு தின நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலக்கடலை விளைச்சலை அதிகரிக்க செயல் விளக்கம்

மழையால் சாலையோரத்தில் திடீா் பள்ளங்கள்

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT