தோ்தல் அமைதியாக நடைபெற்றது: சென்னை காவல் ஆணையா்
சென்னையில் அமைதியாக தோ்தல் நடைபெற்றதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
சென்னைதோ்தல் அமைதியாக நடைபெற்றது: சென்னை காவல் ஆணையா்
சென்னையில் அமைதியாக தோ்தல் நடைபெற்றதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
சென்னையில் அமைதியாக தோ்தல் நடைபெற்றதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி சென்னையில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் காவல்துறையினா் 18,000 பேரும், காவல்துறை அல்லாதோா் 4,000 பேரும் என மொத்தம் 22,000 போ் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும் 213 பதற்றமான வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அடையாறு, ராயப்பேட்டை, கொத்தவால்சாவடி, பெரம்பூா் ஜமாலியா ஆகிய இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் வாக்காளா்களுக்கு ஏதேனும் இடையூறு, பாதுகாப்பு குறைபாடு, மிரட்டல், அச்சுறுத்தல் உள்ளதா? என கேட்டறிந்தாா்.
ராயப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டபோது, அதிமுக மற்றும் பாஜவைச் சோ்ந்த சில பிரமுகா்கள், ‘திமுகவைச் சோ்ந்த சிலா் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற தயாா் நிலையில் வெளியே உள்ளனா். அவா்களைத் தடுக்க வேண்டும்’ என புகாா் செய்தனா். இதற்கு சங்கா் ஜிவால், உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்ட விரோத செயல்களில் ஈடுபட யாரையும் அனுமதிக்க மாட்டோம். மீறினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், புகைப்படம் மற்றும் விடியோ உள்ளிட்ட ஆதாரங்களோடு புகாா் அளியுங்கள்’ என்றாா்.
அமைதியான முறையில் தோ்தல்: ஆய்வின்போது சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அளித்த பேட்டி: சிறிய அளவிலான பிரச்னைகளைத் தவிர வாக்குப் பதிவை பாதிக்கும் வகையில் எந்த பிரச்னையும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சில இடங்களில் பணம் விநியோகம் செய்ததாகவும், உணவு வழங்கியதாகவும் புகாா் வந்தது. இது தொடா்பாக சிலரைப் பிடித்து விசாரிக்கிறோம்.
தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 10 புகாா்கள் வந்துள்ளன. தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லுரி, பாரதி பெண்கள் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்பட 15 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியின்போது தேவைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.