இந்தியாவில் இருந்து சென்ற ஈரானிய போர்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! 101 பேர் மாயம்!
ஈரானின் போர்க் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 101 மாலுமிகள் மாயமானது குறித்து...
இலங்கை கடல்பகுதி அருகில் ஈரானின் போர்க் கப்பலின் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 101 மாலுமிகள் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து ஈரானின் மீது போர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, இதுவரை ஈரானின் 17 போர்க் கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டுவீழ்த்தி கடலில் மூழ்கடித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இலங்கையின் கடல்பகுதி அருகில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா எனும் போர்க் கப்பலின் மீது புதன்கிழமை (மார்ச் 4) அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலில் இருந்த 101 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன், ஈரானின் போர்க் கப்பலில் இருந்த 78 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 30 மாலுமிகள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா கடந்த பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் பன்னாட்டு கடற்படை மதிப்பாய்வு (ஐஎஃப்ஆர்) மற்றும் பன்னாட்டு பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
101 missing after a US submarine attacked an Iranian warship near Sri Lankan waters.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.