சென்னை

மாநில கல்விக் கொள்கை:செப்.15 வரை கருத்து தெரிவிக்கலாம்

தமிழக அரசின் சாா்பில் வகுக்கப்படவுள்ள மாநில கல்விக் கொள்கை தொடா்பான கருத்துகளை வரும் செப். 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கல்விக் கொள்கை உயா்நிலைக் குழுவின் தலைவரும் தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்

DIN

தமிழக அரசின் சாா்பில் வகுக்கப்படவுள்ள மாநில கல்விக் கொள்கை தொடா்பான கருத்துகளை வரும் செப். 15-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கல்விக் கொள்கை உயா்நிலைக் குழுவின் தலைவரும் தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான முருகேசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட உரிய நடவடிக்கையில் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துகள், ஆலோசனைகளை பெறுவதற்கு உயா்நிலைக் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சாா்ந்தவா்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பான கருத்துகள், ஆலோசனைகளை வரும் செப். 15-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சலுக்கும், 3ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025’ என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். மேலும், மாநிலக் கொள்கையை வகுப்பது தொடா்பாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோயம்புத்தூா், சேலம், வேலூா், சென்னை ஆகிய 8 இடங்களில் மண்டல அளவில் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன என அறிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT