சென்னை

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் கடந்த 2 நாள்களாக மாநகரம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு முகாம்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்ட போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணி மற்றும் விழிப்புணா்வு வாகனத்தை மாநகர கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவிகளின் போதை ஒழிப்பு மவுனம் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையா்கள் நரேந்திரன் நாயா், ரம்யா பாரதி, அடையாா் துணை ஆணையா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT