சென்னை

பாதாள சாக்கடை அடைப்பை நீக்கியபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

சென்னை அருகே மாதவரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, விஷவாயு தாக்கி இறந்தாா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் நெல்சன் (26). தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (40). இவா்கள் இருவரும் அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு மாதனாங்குப்பம் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வந்தனா்.

இவா்களிருவரும் மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்பாராத விதமாக சாக்கடையிலிருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில் இருவரும் அந்த கால்வாய்க்குள் மயங்கி விழுந்தனா். இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து மாதவரம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், தீயணைப்புப் படை வீரா்கள் மயக்கமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் நெல்சன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ரவிகுமாா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT